×

பள்ளிகொண்டா அருகே பாலீஷ் போடுவதாக கூறி பெண் ஊராட்சி செயலரிடம் 2 சவரன் தங்க நகை அபேஸ்: டிப்-டாப் ஆசாமிகள் 2 பேருக்கு வலை

பள்ளிகொண்டா, அக்.8: பள்ளிகொண்டா அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் ஊராட்சி செயலரிடம் பாலீஸ் போடுவதாக கூறி 2 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசுகளை அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் உமாராணி(53). இவர் தோளப்பள்ளி ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகின்றார். இவர், கணவரை இழந்து தனியாக வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று காலை 11 மணியளவில் வீட்டிற்கு 2 பேர் டிப்-டாப் உடையணிந்து கொண்டு இவரது வீட்டின் உள்ளே வந்து அமருவதற்கு சேர் போடும்படி கூறியுள்ளனர்.

உமாராணியும் டிப்டாப்பாக இருப்பதை பார்த்து யாரோ அதிகாரிகள் வந்துள்ளதாக நினைத்து அமர வைத்துள்ளார். பின்னர் அந்த ஆசாமிகள் வீட்டில் உள்ள பித்தளை, வெள்ளி பொருட்களுக்கு பாலீஷ் போட்டு கெமிக்கல் மூலம் அழுக்கினை எடுத்து முலாம் பூசி தருவதாக கூறியுள்ளனர். அதற்கு உமாராணி மறுத்துள்ளார். இருந்தும் விடாப்பிடியாக அவரிடம் பேசி முதலில் வீட்டில் உள்ள பூஜை அறையில் இருக்கும் பித்தளை சாமான்களுக்கு கெமிக்கல் பவுடரை போட்டு வீட்டிலிருந்து மஞ்சள் தூள் வாங்கி சுத்தப்படுத்தி பலபலவென காட்டி உள்ளனர்.

இதைப்பார்த்ததும் உமாராணி மேலும், 2 செட் வெள்ளி கொலுசு கொடுத்துள்ளார். அதனையும் பாலீஷ் போட்டு பளிச்சென்று செய்த டிப்டாப் ஆசாமிகள், இறுதியாக உமாராணியின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கலியை கழட்டி தருமாறு கேட்டு வாங்கி பாலீஷ் போட பாத்திரத்தில் உள்ள நீரில் போட்டுள்ளனர். மேலும், பாலீஷ் போடுவதற்கு மேலும் சிறிது மஞ்சள் தூள் தேவை என உமாராணியை எடுத்து வர கூறியுள்ளனர். அவர் மஞ்சள் தூள் எடுக்க சென்றபோது, தங்க சங்கிலி, வெள்ளி கொலுசுகளை அபேஸ் செய்து கொண்டு டிப்டாப் ஆசாமிகள் பைக்கில் தப்பித்து சென்றுவிட்டனர்.

இதனை சற்றும் எதிர்பாராத உமாராணி கத்தி கூச்சலிட்டதில் அருகில் இருந்தவர்கள் அவர்களை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து உமாராணி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களை முதல்கட்டமாக போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பள்ளிகொண்டா அருகே பாலீஷ் போடுவதாக கூறி பெண் ஊராட்சி செயலரிடம் 2 சவரன் தங்க நகை அபேஸ்: டிப்-டாப் ஆசாமிகள் 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : SHAVAN ,URADSI ,Balikonda ,Secretary of State ,Shavar ,Shavaran ,Azamis ,Dinakaraan ,
× RELATED கரைமேடு ஊராட்சி பகுதியில் உள்ள வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டும்