×

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

 

பெரம்பூர், அக்.8: சென்னையில் குற்ற செயல்களை தடுக்கவும் ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், சென்னை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகர கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர், காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில், தொடர் குற்ற செயல்கள் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொடுங்கையூர் பகுதியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (எ) வெங்கடேசன் (27). இவர் மீது கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதே போன்று, மாதவரம் ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (எ) ஓட்ட வட மணி (31). இவர் மீது கொடுங்கையூர். எம்கேபி நகர் கொருக்குப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இருவரும் கடந்த மாதம் 3ம் தேதி கொடுங்கையூர் பகுதியில் விஜய் என்பவரை கத்தியால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, கொடுங்கையூர் பகுதியில் இவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து வெங்கடேசன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் சென்னை மாநகர கமிஷனர் சந்திப் ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தார். இதனை அடுத்து, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். தற்போது சிறையில் இருக்கும் சிவா (எ) வெங்கடேசன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் மீதும், குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடதக்கது.

The post தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Chennai ,Chennai Metropolitan Police Department ,
× RELATED சென்னை மாநகர காவல் துறையில் கூடுதல்...