×

அரியலூரில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைப்பு

அரியலூர், அக்.8: அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் எம்.எல்.ஏ., கு.சின்னப்பா முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறிஞர் அண்ணா நெடுத்தூர ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்த அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்போட்டியில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கு 8 கி.மீ., தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ., தூரமும் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பெறுபவருக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.3,000, மூன்றாம் இடம் பெறுபவருக்கு ரூ.2,000 பரிசுத்தொகையும், பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இதேபோன்று பெண்கள் பிரிவிலும் முதல் இடம் பெறுபவருக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.3,000, மூன்றாம் இடம் பெறுபவருக்கு ரூ.2,000 பரிசுத்தொகையும், பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதே போன்று ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவுகளிலும் நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்ற வெற்றியாளர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. ஓட்டப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுபோன்ற நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் மூலம் உடற்தகுதியினை சரியான முறையில் பேணுவதால் மனஅழுத்தம் குறைவு, மனநிலை மேம்பாடு அடைதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது.

எனவே, உடற்தகுதி குறித்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாணவ, மாணவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Scholar Anna Nedundura race ,Ariyalur ,Ariyalur district ,Arianjar Anna Nedunthura race ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...