×

முத்துப்பேட்டை அலையாத்திகாடு, லகூன் பகுதியில் கஞ்சா, போதை பொருள் கடத்தலா?

 

முத்துப்பேட்டை, அக். 8: முத்துப்பேட்டை அலையாத்திகாடு, லகூன் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறதா? என்று கூட்டு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடல் சார்ந்த பகுதி. இந்திய எல்லையில் ஒரு மைய பகுதியாகும். இந்த வழியாக படகில் இலங்கைக்கு அடிக்கடி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாகவும், உணவு பொருட்கள் அனுமதியின்றியும் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரும் மற்றும் வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து தடுத்து வந்தாலும் கடத்தல் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

அதனடிப்படையில், கடலோர பாதுகாப்பு குழுமம், காவல் துறை கூடுதல் இயக்குனர் மற்றும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடலோர பாதுகாப்பு குழுமம், வனத்துறை மற்றும் மீன்வளத்துறை இணைந்து வனத்துறைக்கு சொந்தமான படகில் கடலை ஒட்டியுள்ள முத்துப்பேட்டை லகூன் பகுதி மற்றும் அலையாத்திகாடுகள் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு கூட்டு ரோந்து பணிகள் தொடர்சியாக மேற்கொள்ளப்பட்டடு வருகிறது.

இந்நிலையில் நேற்று கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி, சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன், வனத்துறை வனக்காப்பளர் வினோத், கடலோர பாதுகாப்பு குழுமம் தலைமை காவலர்கள் செந்தில்குமார், கலைவாணன், சட்டம் ஒழுங்கு முதல் நிலை காவலர் ரமேஷ் மற்றும் வனக்காவலர்கள் மாரிமுத்து, வீரையன் ஆகியோர் வனத்துறை படகில் சென்று முத்துப்பேட்டை லகூன் பகுதிகளிலும், அலையாத்திகாடுகளிலும் மற்றும் கடல் பகுதிகளிலும் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறதா? என்று தீவிர தேடுதல் பணி மேற்கொண்டனர்.

மேலும் மீனவர்களிடம் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கஞ்சா கடத்தல் தொடர்பாக காவல்துறை மற்றும் இதர அரசு துறைகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு கூட்டு ரோந்து பணியானது, முத்துப்பேட்டை லகூன் பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது என கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் தெரிவித்தனர்.

The post முத்துப்பேட்டை அலையாத்திகாடு, லகூன் பகுதியில் கஞ்சா, போதை பொருள் கடத்தலா? appeared first on Dinakaran.

Tags : Muthupettai Alayathigadu ,Muthupet ,Muthupet Alayathigad, Lagoon ,Muthuppet ,Alayathigadu ,Dinakaran ,
× RELATED எடையூர், வங்கநகர் கிராமங்களில் 800 ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி