×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

புதுக்கோட்டை, அக்.8: புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை மச்சுவாடியல் உள்ள கற்பக விநாயக திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்து பேசினார். சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்து பேசினார்.

கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கழகத்தின் பல்வேறு அணிகள் சார்பில் சிறப்புடன் கொண்டாட தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கேற்ப வரும் 14ம்தேதி அன்று சென்னையில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இந்தியா கூட்டணி அங்கம் வகிக்கும் பெண் தலைவர்கள் பங்கேற்கும் மகளிர் அணி மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டதிலிருந்து ஏராளமான மகளிர் அணியினர் மற்றும் மகளிர் தொண்டரணியினர் செல்வதற்கு உறுதுணையாக இருப்பது.

வாக்குச்சாவடி நிலை முகவருடன் (BLA-2) இணைந்து வாக்குச்சாவடி நிலை பொறுப்பாளர் பங்கேற்கும் வாக்குச்சாவடி கூட்டங்களை குறைந்தபட்சம் 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொரு ஒன்றியதிற்கும் பொறுப்பாளராக ஒவ்வொரு கழக அணியினர், மாவட்ட கழக நிர்வாகிகள் ஒருவர் துணையோடு தொகுதி தேர்தல் பார்வையாளரோடு நடத்த ஏற்பாடு செய்யது என தீர்மானிக்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக புதிய உறுப்பினர்களை சேர்த்து அவர்களும் அந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

டிசம்பர் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறும் கழகத்தின் திருப்புமுனை மாநாடான இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு உலக சாதனை மாநாடாக இளைஞர் அணி மாநாட்டை நடத்திட இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை நிற்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் திருமயம் தொகுதி பார்வையாளர் மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் கோவிந்தசாமி, அறந்தாங்கி தொகுதி பார்வையாளர் மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆனந்த், ஆலங்குடி தொகுதி பார்வையாளர் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கேசவன், மாநில, மாவட்ட, நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : SOCIETIES ,PUTHUKKOTA DISTRICT ,DIMUKA EXECUTIVE COMMITTEE ,PUTHUKKOTA ,DMUKA EXECUTIVE COMMITTEE ,Putukkot District ,Dhimuka Executive ,Committee ,Dinakaraan ,
× RELATED பொது விநியோகத் திட்டப் பொருட்களை...