×

சமாஜ்வாடி எம்எல்ஏவின் ரூ150 கோடி சொத்து பறிமுதல்: வருமான வரித்துறை நடவடிக்கை

லக்னோ: மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ அபு அஸ்மி வருமானத்துக்கு அதிகமாக பினாமி பெயரில் சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறைக்கு செய்தி கிடைத்தது. அதனையடுத்து லக்னோவில் உள்ள வருமான வரித்துறை பினாமி சொத்து விசாரணை பிரிவினர் அஸ்மிக்கு சொந்தமாக மகாராஷ்டிரா மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தினர்.

அப்போது, வாரணாசி கங்கை கரை அருகில் ரூ.32 கோடி மதிப்புள்ள வருணா கார்டன் என்ற 45 அடுக்குமாடி கட்டிடம், பல கோடி மதிப்புள்ள விநாயகா குருப் நிறுவனத்துக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம், அதன் வங்கி கணக்கில் உள்ள ரூ.10 கோடி ஆகிய பினாமி பெயரில் உள்ள சொத்துகள் உள்பட ரூ.150 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சொத்துக்களுடன் தொடர்புடைய பலர் மீதும், எம்.எல்.ஏ அபு அஸ்மி மீதும் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

The post சமாஜ்வாடி எம்எல்ஏவின் ரூ150 கோடி சொத்து பறிமுதல்: வருமான வரித்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Samajwadi MLA ,Lucknow ,Maharashtra ,Samajwadi Party MLA ,Abu Azmi ,benami ,
× RELATED உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு