×

‘நவீன ராவணன் ராகுல்’- பாஜ மீது காங்கிரஸ் கோர்ட்டில் வழக்கு


ஜெய்ப்பூர்: பாஜ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் கடந்த 5ம் தேதி ராகுல் காந்தியை, ‘நவீனகால ராவணன்’ என்று விமர்சித்து அவரது புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து 10 தலை ராவணன் போன்ற பதிவு வெளியானது. இந்த நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஜஸ்வந்த் குர்ஜார் இந்த அவதூறு தொடர்பாக ஜெய்ப்பூர் பெருநகர கோர்ட்டு-11 ல் கண்டன மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

அதில், ‘பாஜ தனது அரசியல் லாபங்களுக்காக வேண்டுமென்றே ராகுல் காந்தியை, புதுயுக ராவணன் என்று அவதூறாக விமர்சித்து, அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர்களை இந்து விரோதிகளாகவும் பாஜ சித்தரித்து வருகிறது. இப்படிப்பட்ட அவதூறுக்கு காரணமான பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜ தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது.

The post ‘நவீன ராவணன் ராகுல்’- பாஜ மீது காங்கிரஸ் கோர்ட்டில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Naveena Ravanan Rahul ,BJP ,Congress Court ,Jaipur ,Baja ,Rahul Gandhi ,Congress ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...