×

நீலகிரியில் 10 புலிகள் பலியானதற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்: தமிழ்நாடு அரசு அறிக்கை

ஊட்டி: நீலகிரியில் 10 புலிகள் இறப்புக்கான காரணம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: நீலகிரி மாவட்டத்தில் நான்கு குட்டிகள் உட்பட 10 புலிகள் சமீபத்தில் உயிரிழந்தன. தமிழகத்தில் 2006ல் நடந்த அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் படி 76 புலிகள் மட்டுமே இருந்தது. 2022ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தற்போது 306 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பத்தில் 2006ல் 56 புலிகள் மட்டுமே இருந்தன. தற்போது, இங்கு 114 புலிகள் உள்ளன.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கடிதத்தின் படி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் பெங்களூர் டாக்டர் ேக.ரமேஷ் விஞ்ஞானி, இந்திய வன விலங்கு நிறுவனம் மற்றம் வன விலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் மண்டல துணை இயக்குநர் டாக்டர் கிபாசங்கர் மற்றும் சென்னையை சேர்ந்த வன விலங்கு ஆய்வாளர் டோக்கி ஆதில்லைய்யா ஆகியோர் கொண்ட குழு நீலகிரியில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 10 புலிகள் இறந்தது குறித்து விரிவான கள மதிப்பீட்டை மேற்கொண்டனர். பொதுவாக வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 2 அல்லது 3 குட்டிகளை ஈனும். சில சமயங்களில் 5 குட்டிகளை ஈனும்.

அதில், 50 சதவீதம் குட்டிகள் நோய், பட்டினி மற்றும் சிசுக்கொலை போன்ற பல காரணிகளால் இறக்கும். சீகூர் வனப்பகுதியில் 2 வார குட்டிகள் இறப்பதற்கு ஒன்று குட்டிகள் உடல் நலம் குன்றியிருக்கும். மேலும், இளைய வயதில் குட்டிகள் பிரசவிக்கும் போது, இது போன்று இறப்புகள் நேரிடும். சின்னக்குன்னூர் பகுதியில் உயிரிழந்த நான்கு குட்டிகள் இரண்டு மாதங்களே ஆனவை. இந்த குட்டிகளுக்கு உணவைத் தேடி வெகு தூரம் தாய் சென்ற போது, இவைகள் கவனிக்கப்படாமல் பட்டினியால் இறந்திருக்க வாய்ப்புள்ளது. நடுவட்டம் மற்றும் கார்குடி ஆகிய இரண்டு இடங்களில் புலிகள் இறந்ததற்கு உட்பூசல் சண்டை காரணமாகும்.

எமரால்டு பகுதியில் இரண்டு புலிகள் இறந்ததற்கு காரணம் விஷம் கலந்த உணவை உட்கொண்டதே. சின்னக்குன்னூர் பகுதியில் ெபாருத்தப்பட்ட கேமராக்களில் இருந்து 15 புலி படங்கள் கண்காணிப்பு குழுவினருக்கு கிடைத்துள்ளது. இதில், 4 பெண் புலிகள் பதிவாகியுள்ளது. சமீபத்தில் நீலகிரியில் 10 புலிகள் உயிரிழந்தது பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடை முறைகளை மேம்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்களை வன காவலர்களாக அரசு முறைப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நீலகிரியில் 10 புலிகள் பலியானதற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்: தமிழ்நாடு அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Tamil Nadu ,Ooty ,Tamil Nadu government ,Nilgiri ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால்...