×

தேனாம்பேட்டை மருந்து கடை ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்: மீண்டும் மீண்டும் பரபரப்பு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை மருந்து கடை ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி குறுந்தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலை சேர்ந்தவர் முகம்து இத்ரீஸ். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கடையில் பணிபுரிகிறார். இவர், நேற்று முன் தினம் தனது கோட்டாக் வங்கி கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ.2000 மற்றும் மற்றொரு நண்பருக்கு ரூ.100 அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில் முகமது இத்ரீஸ் செல்போன் எண்ணுக்கு ரூ.753 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரம் இருப்பு இருப்பதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் சரியாக கிடைக்காததையடுத்து வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு வங்கி தரப்பிலும் எந்தவித பதிலும் அளிக்க முன்வரவில்லை. ஏற்கனவே தஞ்சாவூரை சேர்ந்த ஒரு நபருக்கு கோட்டாக் வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருந்ததாக குறுஞ்செய்தி வந்து, அவரது கணக்கு முடக்கப்பட்டது.

அதேபோல, அடுத்ததாக தற்போது அதே கோட்டாக் வங்கியில் இருந்து முகமது இத்ரீஸ்க்கு ரூ.753 கோடி இருப்பு இருப்பது போல் குறுந்தகவல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கணக்கில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி இருப்பு காட்டி அதிர்ச்சி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேனாம்பேட்டை மருந்து கடை ஊழியர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட்: மீண்டும் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thenampet drug shop ,CHENNAI ,Sankarankovilai… ,Thenampet drug store ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...