×

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் 3000 பேர் தவிப்பு


காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் பெய்த மழை, வெள்ளத்தில் சிக்கிய 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவித்து வருகிறார்கள். சிக்கிம் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை மேகவெடிப்பினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ முகாம் அடித்து செல்லப்பட்டு 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமானார்கள். 2563 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 41,870 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1200 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 40 பேருக்கு மேல் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 பேர் ராணுவ வீரர்கள்.

மாயமான 141 பேரை தேடும் பணி நான்காவது நாளாக நேற்றும் நீடித்தது. அப்போது 30 பேர் ஒரே இடத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் மாயமானவர்கள் எண்ணிக்கை 81ஆக குறைந்தது. இதற்கிடையே 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சிக்கிமில் சிக்கித்தவிக்கிறார்கள். அவர்கள் லாச்ெசன், லாச்ெசங் பகுதியில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் எம் 17 மூலம் முயன்றும் மீட்க முடியவில்லை.

The post சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் 3000 பேர் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sikkim Gangtok ,Sikkim ,Dinakaran ,
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...