×

உபி பெண் அதிகாரியின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு அமைப்பு: ராணுவம் தகவல்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் தனது மேலதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதுதொடர்பாக விசாரணை நடத்த தற்போது உள்விவகார புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் சாந்தனு பிரதாப் சிங் கூறுகையில், ‘‘பெண் ராணுவ அதிகாரியின் புகார் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவு சட்டத்தின்படி, புகார் அளித்தவர் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் தகவல்களை வெளியிட முடியாது. பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க ராணுவம் உறுதியாக உள்ளது. எனவே இதுபோன்ற புகார்கள் உரிய கவனத்துடன், முன்னுரிமை தந்து கையாளப்படுகிறது’’ என்றார்.

The post உபி பெண் அதிகாரியின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு அமைப்பு: ராணுவம் தகவல் appeared first on Dinakaran.

Tags : UP ,Army ,Lucknow ,Bareilly, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...