×

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் பிரகடனம் தமிழர்களை மீட்க உதவி எண்கள் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை: இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் பற்றி தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் தமிழகத்தை சேர்ந்த 15 பேர் அயலக தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டனர். அவர்கள் ஜெருசலத்தில் பணியாற்றி வருவதாகவும், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறினர். மேலும், போர் தீவிரமடையும் சூழல் நிலவுவதால் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், யாராவது இஸ்ரேலில் இருந்தால், அவர்களும் தொடர்பு கொண்டால் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்தவகையில் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 87602 – 48625, 99402 – 56444, 96000 – 23645 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் பிரகடனம் தமிழர்களை மீட்க உதவி எண்கள் அறிவிப்பு: தமிழ்நாடு அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : ISRAEL ,PALESTINE ,TAMIL NADU ,Chennai ,Tamil Nadu government ,Tamil Welfare and Rehabilitation Department ,Tamils ,Dinakaraan ,
× RELATED ஏடன் வளைகுடாவில் 3 கப்பல்கள் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்