×

தாராபுரத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பார்க் ரோட்டில் அலுவலகத்துடன் கூடிய வீட்டில் குடியிருப்பவர் வழக்கறிஞர் அண்ணாதுரை (55).அதிமுக பிரமுகர். தாராபுரம் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர். இவரது வீட்டுக்கு நேற்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், அவரது கடந்த 3 வருட பண பரிவர்த்தனை, அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், வங்கி வரவு செலவுகள் குறித்து ஆய்வு செய்து, ஆவணங்களை சோதனை செய்தனர். காலை 11 மணி துவங்கி பிற்பகல் வரை தொடர்ந்து விசாரணை நடந்தது.

இந்நிலையில், அதிமுக பிரமுகர் அண்ணா துரைக்கும், ஒன்றிய அமைச்சர்கள் சிலருக்கும் நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பணத்துடன் முகாமிட்டுள்ள ஆறு பேர் அடங்கிய குழுவினர், தாராபுரம் நகரில் ஏராளமான ஏக்கர் காடுகள், தோட்டங்கள் உள்ளிட்டவற்றை விலை கொடுத்து வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வந்த புகாரின்பேரிலும் அண்ணாதுரை வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. வழக்கறிஞர் அண்ணாதுரை கூறுகையில்,‘‘சில ஆவணங்களில் மட்டும் என்னிடம் கையெழுத்து பெற்று சென்றுள்ளனர். எனது உதவியாளர் சாதிக் பாட்ஷாவின், பழநி குமரலிங்கம் கிராமத்தில் உள்ள வீடு, பொள்ளாச்சியில் உள்ள எனது மகன் அருண் வீட்டிலும் சோதனை நடந்தது’’ என்றார்.

The post தாராபுரத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tarapuram ,Tharapuram ,Annadurai ,Tarapuram Park Road ,Tirupur district ,Tarapuram… ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ உள்பட பல ஆண்களை மயக்கி வலையில்...