×

பராமரிப்பு பணி முடிந்தது பழநியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடங்கும்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்கு வசதியாக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்கள், தெற்கு கிரிவீதியில் இருந்து ஒரு ரோப்கார் இயக்கப்படுகிறது. ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம். 1 மணி நேரத்தில் சுமார் 450 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்காரில் ஷாப்ட் இயந்திரம் பழுதானதால் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான புதிய ஷாப்ட் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டது. தொடர்ந்து இதர பழுதான இயந்திர பாகங்கள் மாற்றப்பட்டு, ரோப்காரில் கடந்த 2 நாட்களாக பஞ்சாமிர்த டின்களை அடுக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வந்தது. நேற்று ரோப்கார் வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் ஆய்வறிக்கையை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர். இதனடிப்படையில் இன்று முதல் ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பராமரிப்பு பணி முடிந்தது பழநியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடங்கும் appeared first on Dinakaran.

Tags : Palani ,Dindigul District ,Palani Dandayuthapani Swamy Temple ,West Girivedi ,Dinakaran ,
× RELATED பழநி பகுதி விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்: திரளானோர் தரிசனம்