×

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வெள்ளை பூலாம்பட்டி ஆண்டிகவுண்டம்பட்டி ஒத்த வீட்டைச் சேர்ந்தவர் சரவணன்(30). பொக்லைன் ஆபரேட்டர். சேலத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி(26). சரோணிகா(5), கிருத்திகா(3) என்ற 2 மகள்களும், லட்சித் என்ற ஒன்றரை வயது மகனும் இருந்தனர்.

சிறுமி சரோணிகாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், பேத்தியை சரிவர கவனிக்கவில்லை என மாமனார் பொன்னுசாமி நேற்று முன்தினம் மருமகள் தங்கமணியை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், மகள் கிருத்திகா, மகன் லட்சித்துடன் வெளியே சென்றார். நேற்று காலை அப்பகுதி வயலில் உள்ள கிணற்றில் தங்கமணியின் செருப்பு மிதந்தது. தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Saravanan ,White Phoolampatti Antikaundampatti ,Trichy district ,Salem ,
× RELATED டூவீலர் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது