×

சேத்துப்பட்டு, வந்தவாசி பகுதிகளில் கனமழை காரணமாக 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன

சேத்துப்பட்டு :  கனமழை காரணமாக சேத்துப்பட்டு- போளூர் நெடுஞ்சாலையில் நேற்று 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சிவனேசன், மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, 2 புளிய மரங்களையும் உடனடியாக அகற்றி போக்குவரத்து சீர் செய்தனர்.இதேபோல், வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மீது சாலையோரம் இருந்த புளியமரம் வேராடு சாய்ந்தது. இதில், டிராக்டர் மற்றும் டிப்பர் முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்த வந்தவாசி வடக்கு போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர். இதேபோல், வந்தவாசி அடுத்த மருதாடு- ஓசூர் சாலையில் ஒரு புளியமரமும் தெள்ளாறு அருகே மற்றொரு புளியமரமும் வேரோடு சாய்ந்தது….

The post சேத்துப்பட்டு, வந்தவாசி பகுதிகளில் கனமழை காரணமாக 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Chetupattu ,Chetupatu-Bolur highway ,Sethupattu ,Dinakaran ,
× RELATED வந்தவாசி பகுதியில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி