×

குடந்தை அருகே ஆற்றில் குளித்த வியாபாரி மாயம்

*2 நாள்களாக தீயணைப்பு வீரர்கள் தேடுதல்

திருவிடைமருதூர் : கும்பகோணம் அருகே அரசலாற்றில் குளித்த வியாபாரி மாயமானது குறித்து இரண்டாவது நாளாக நேற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம், அம்மாபேட்டையை சேர்ந்த முத்துசாமி மகன் முருகன் (40). தலையணை வியாபாரி. திருமணமாகாதவர். இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள அரசலாற்றுக்கு குளிக்க சென்றார். ஆனால் அதன் பிறகு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர், ஊராட்சி தலைவர் அளித்த தகவலின் பேரில், கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ரப்பர் படகு மூலம் அரசலாற்றில் முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியதால் முருகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்றும் இரண்டாவது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. இருப்பினும் முருகன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடந்தை அருகே ஆற்றில் குளித்த வியாபாரி மாயம் appeared first on Dinakaran.

Tags : Kudantai ,Thiruvidaimarudur ,Arasalar ,Kumbakonam ,
× RELATED ஆன்மிக சொற்பொழிவு