திண்டுக்கல், அக். 7: திண்டுக்கல் ஒய்எம்ஆர்பட்டி கென்னடி ஆரம்ப பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி ஆணையர்கள் சரவணகுமார், வில்லியம் சகாயராஜ், சாமிநாதன், வள்ளராஜம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது, பொதுமக்களிடம் கனிவுடன் பேசி அவர்களுக்கு தேவையான சுகாதார பணிகளில் ஈடுபடுவது, கழிவுநீர் தேங்காமல் பார்த்து கொள்வது, குப்பைகளை விஞ்ஞான முறைப்படி அகற்றுவது, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விளக்கி கூறப்பட்டது.
மேலும் சிறப்பாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தேர்ந்தெடுத்து, மாதந்தோறும் அவர்கள் கவுரவபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதில் அனைத்து சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாநகர நல அலுவலர் (பொ) செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் தங்கவேல், தட்சிணாமூர்த்தி செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.
The post திண்டுக்கல்லில் தூய்மை பணி விழிப்புணர்வு appeared first on Dinakaran.