×

2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

 

ஈரோடு, அக். 7: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி, ராமநாதபுரம், வினாயகர் கோயில் எதிரில் ஜோசியம் பார்த்து வருபவர் முருகன் (58). இவரது மகள் கவிதா (29). இவருக்கு கடந்த 10 ஆண்டுக்கு முன்னர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டை சேர்ந்த மீன் பிடித் தொழிலாளி மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஹன்சிகா (9), கீர்த்திகா (6) என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள், கவுந்தப்பாடி, இளங்கோ வீதியில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 6ம் தேதி மணிகண்டன் மீன் பிடிக்கச் சென்றுவிட்டு மதியம் 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, அங்கு மனைவி கவிதா மற்றும் குழந்தைகளை காணவில்லை.

இதையடுத்து, மணிகண்டன் தனது மாமனார் முருகனுடன் சேர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கவிதா மற்றும் குழந்தைகளை தேடியுள்ளார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காத நிலையில், கவிதாவின் தந்தை முருகன், கவுந்தப்பாடி போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்த போலீசார், மாயமான கவிதா மற்றும் குழந்தைகளைத் தேடி வருகின்றனர்.

The post 2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Murugan ,Joseph ,Vinayagar Temple ,Herod District ,Kavundapadi ,Ramanathapuram ,
× RELATED ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்