×

நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் நகை திருடிய பெண் கைது

பரமக்குடி, அக். 7: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் கணேசன்(55) என்பவர் நகை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த ஜூலை மாதம் 45 மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து நகை வாங்க வேண்டும் எனக் கூறி, கடையில் உள்ள நகைகளை பார்த்துள்ளார். சிறிது நேரத்தில் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறியவர் திரும்பவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த கணேசன் நகைகளை சரிபார்த்த பொழுது 60 ஆயிரம் மதிக்கத்தக்க இரண்டு பவுன் நகை காணவில்லை. இது குறித்து பார்த்திபனூர் காவல் நிலையத்தில் கணேசன் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணையை போலீசார் தொடங்கினர்.

போலீசார் விசாரணையில் நகையை திருடியது மதுரையில் வசிக்கும் குப்புசாமியின் மனைவி மீனாட்சி என்பது தெரிய வந்தது. நகை கடைகளில் மட்டுமே நூதன முறையில் திருடியதாக மதுரை, மானாமதுரை, திருப்புவனம், திருமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் மீது எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று மதுரையில் வைத்து மீனாட்சியை பார்த்திபனூர் போலீசார் கைது செய்தனர்.

The post நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் நகை திருடிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Parthipanur ,Paramakkudi ,
× RELATED தந்தையை இழந்த துக்கத்தில் தேர்வெழுதிய மாணவர் தேர்ச்சி..!!