×

பாஜவினரைக் கண்டித்து தேனியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தேனி, அக். 7: ராகுல்காந்தியை அவமரியாதை செய்த பாஜவினரை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், வட்டாரத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். தேனி நகர தலைவர் கோபிநாத் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பாவினர் சமூக வளைதளங்களில் ராகுல்காந்தியை ராவணனாக சித்தரித்து அவமரியாதை செய்து வருவதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி, சின்னப்பாண்டி, நகரதலைவர்கள் பெரியகுளம் கனகசீதாமுரளி, போடி முசாக்மந்திரி, சின்னமனூர் பழனிமுத்து, கம்பம் போஸ், கூடலூர் ஜெயப்பிரகாஷ், வட்டார தலைவர்கள் போடி ஜம்புசுதாகர், பெரியகுளம் டாக்டர்.ஹம்சாமுஹம்மது, சின்னமனூர் ஜீவா,கம்பம் ராஜாமுகமது, உத்தமபாளையம் வக்கீல்.சத்யமூர்த்தி, ஆண்டிபட்டி தப்புராஜ், மாவட்ட மகளிரணி தலைவி கிருஷ்ணவேணி, மாவட்ட எஸ்சி, எஸ்டி அணி தலைவர் இனியவன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பாஜவினரைக் கண்டித்து தேனியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Bajwinar Honey ,HONEY ,BAJVIN ,RAKULKANTI ,District ,Dinakaraan ,
× RELATED தேன் நெல்லி