×

தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டத்தில் 2,39,582 பெண்கள் பயன்

தூத்துக்குடி, அக்.7: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிவித்து, அதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் காணும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்.15ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ₹ஆயிரம் வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேநாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2,39,582 பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டத்தில் 2,39,582 பெண்கள் பயன் appeared first on Dinakaran.

Tags : Tuticorin District ,Thoothukudi ,District ,Collector ,Senthilraj ,Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stal ,Thoothukudi district ,
× RELATED கோவில்பட்டி அருகே தறிக்கெட்டு ஓடிய...