×

ஒன்றிய தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு 76 பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: ஒன்றிய தலைமை தகவல் ஆணையராக இருந்த ஒய்.கே.சின்கா கடந்த 3ம் தேதி ஓய்வு பெற்றார். அந்த பதவிக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், ஒன்றிய அமைச்சர் அடங்கிய குழு புதிய தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும். தகவல் அறியும் உரிமை(ஆர்டிஐ) சட்ட விவகாரங்களில் உயர் அதிகாரம் கொண்ட தலைமை தகவல் ஆணையத்தில் 10 ஆணையர்கள், ஒரு தலைமை தகவல் ஆணையர் பதவிகள் உள்ளன. தற்போது 4 தகவல் ஆணையர்களுடன் அது இயங்கி வருகிறது. புதிய தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு பத்திரிகைகளில் விளம்பரம் அளித்தது.

இது தொடர்பாக கமோடோர் லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் தகவல் கேட்டிருந்தார். அதற்கு ஒன்றிய பணியாளர் நலத்துறை அளித்த பதிலில்,தற்போதைய தகவல் ஆணையர்களான ஹீராலால் சமாரியா,சரோஜ் புன்ஹானி,உதய் மகுர்கர் உட்பட 76 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஓய்வு பெறும்போது,பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்படுவார்கள். ஆனால், அதுபோல் ஒன்றிய தகவல் ஆணையத்தில் தற்காலிக தலைமை ஆணையரை நியமிப்பதற்கு ஆர்டிஐ சட்டத்தில் இடமில்லை என லோகேஷ் பத்ரா தெரிவித்தார்.

The post ஒன்றிய தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு 76 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Union ,Information ,Commissioner ,New Delhi ,Union Chief Information Commissioner ,YK Sinha ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை