×

ரூ.7.20 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி

தேன்கனிக்கோட்டை, அக்.7: தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 16வது வார்டு தின்னூர் கிராமத்தில் ரூ.7.20 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சீனிவாசன் பூமி பூஜை செய்து சாலை பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் 16வது வார்டு கவுன்சிலர் தர், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பேரூர் அவைத்தலைவர் சீனிவாசன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன், வார்டு கவுன்சிலர்கள் சென்னீரா, சேகர், மஞ்சுநாத், ஆனந்த், கெம்பண்ணா மற்றும் கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.7.20 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Dinnoor ,Dinakaran ,
× RELATED தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு