×

கரூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

கரூர்: கரூர் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக சரவணகுமார் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் நேற்ற கரூர் பஸ் நிலையத்தில் ஒவ்வொரு கடைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். வாடகை கொடுக்கப்பட்டுள்ளதா எத்தனை மாதம் வாடகை பாக்கி உள்ளதா என்ற விவரங்களை கடை வாரியாக சேகரித்தார். மேலும் கடை உரிமையாளர் யார்? நீங்கள் வேலை பார்க்கும் நபரா? அல்லது உரிமையாளரா? யார் பேரில் கடை உள்ளது என்பதே கேட்டறிந்தார். மேலும கடை உரிமையாளர்களை ஆக்கிரப்புகளை அகற்றும்படி அறிவுறுத்தினார். மேலும் பஸ் நிலையம் அருகில் உள்ள பழக்கடைகளில் பயன்படுத்தும் தராசுகளை நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது ஒரு கடையில் உள்ள தராசில் ஒரு கிலோ ஆப்பிள் பழத்தை வைத்து எடை பார்த்த பொழுது 800 கிராம் தான் இருந்தது முறையான தராசுகளை பயன்படுத்துமாறு கடை உரிமையாளர் எச்சரித்தார். மேலும் காய்கறி மார்க்கெட்டிற்கு உள்ளே சென்று பொதுமக்கள் சென்று வருவதற்கு போதுமான அளவு இடைவெளி விட்டு கடை அமைத்து அமைக்குமாறு கடை உரிமையாளரிடம் கூறினார். நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் லட்சியவர்மா, வருவாய் ஆய்வாளர் மது, சுகாதார இன்ஸ்பெக்டர்கள் சுகுமார் பிரபாகர், சிக்கண்னன், தனபால் மதியழகன் உட்பட பாலர் கலந்து கொண்டனர்.

The post கரூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karur Bus ,Stand ,Karur ,Saravanakumar ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED கரூர் பஸ் நிலையம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு