×

காவலாளியை தாக்கி பூட்டி வைத்த மில் உரிமையாளர் மீது வழக்கு

 

விருதுநகர், அக்.7: காவலாளியை தாக்கி பூட்டி வைத்த ஆயில் மில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டை சேர்ந்த கண்ணன்(54), அதே பகுதியில் சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான ஆயில் மில்லில் வாட்ச் மேன் வேலை செய்து வந்தார். அத்துடன் மில் வளாகத்தில் இருக்கும் ஆடு, மாடு, நாய்களை பராமரித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயில் மில்லில் இருக்கும் பால்மாட்டின் பாலை கன்று குடித்து விட்டதாக கூறி மில் உரிமையாளர் சந்திரமோகன், வாட்ச்மேன் கண்ணனை அழைத்து தரக்குறைவாக திட்டி தாக்கி உள்ளார். ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றால் கை, காலை உடைத்து போட்டு விடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், வெளியே போகவிடாமல் அடைத்து வைத்துள்ளார். சந்திரமோகன் வெளியே சென்ற பிறகு, வாட்ச்மேனிடம் கேட்டு உயிருக்கு பயந்து வெளியே வந்துள்ளார். இது குறித்து மேற்கு போலீசில் கண்ணன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post காவலாளியை தாக்கி பூட்டி வைத்த மில் உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Pullalakottai ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...