×

பாஜவை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் ராகுல்காந்திக்கு 10 தலை அல்ல 140 கோடி தலை: கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னை: ராகுல்காந்திக்கு 10 தலை அல்ல 140 கோடி தலைகள் இருக்கிறது என்ற முழக்கத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். ராகுல்காந்தியை இழிவுபடுத்துகிற வகையில் கேலிசித்திரம் வெளியிட்ட பாஜவை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு பாஜ தலைமை அலுவலக முற்றுகை ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். ஜே.எம்.எச். அசன் மவுலானா எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், ஜெ.டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன் குமார், அடையார் துரை மற்றும் மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், பி.வி. தமிழ்செல்வன், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில பொதுச் செயலாளர் இல.பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஓ.வி.ஆர்.ரஞ்சித், கவுன்சிலர்கள் தீர்த்தி, சுரேஷ்குமார், சுகன்யா செல்வம், தனலட்சுமி, அமிர்தவர்ஷினி, சுகாசினி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பாஜவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: இந்தியாவில் சிறந்த தலைவர் ராகுல்காந்தி தான். பாஜவினர் அவரை குழந்தை என்று சொன்னார்கள். இன்று அவரை ராவணனாக சித்தரித்திருக்கிறார்கள். அவருடைய இந்திய ஒற்றுமை பயணம் பாஜகவினரை அச்சமடையச் செய்துள்ளது. பாஜ ராகுல்காந்திக்கு 10 தலைகள் என்று சொல்கிறார்கள். நாங்கள் சொல்கிறோம் அவருக்கு 140 கோடி தலைகள் இருக்கிறது. இந்த முழக்கத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தில் அரசியல் பேசவில்லை. காந்திய வழியில் மக்களிடையே அன்பை விதைத்தார். கோட்சே போன்று பாஜ மக்களிடையே வெறுப்பை விதைத்து வருகிறது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திமுகவுக்கும், பாஜவும் தான் போட்டி என்று சொல்வது ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் போன்று, நானும் ரவுடி தான்… என்பது போன்று நகைச்சுவையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post பாஜவை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் ராகுல்காந்திக்கு 10 தலை அல்ல 140 கோடி தலை: கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Rahul Gandhi ,KS Azhagiri ,Chennai ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல்...