×

ஒரு நாள் தலைமை ஆசிரியர் மாணவனுக்கு சர்பரைஸ்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மாகினாம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் தர்சன் என்பவர், அண்மையில் நடைபெற்ற காலாண்டு தேர்வின்போது, பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்றார். இதையடுத்து மாணவர் தர்சனை, பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க வைத்து, ஊக்கப்படுத்துவதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று, மாணவர் தர்சனை அழைத்து வந்து, தலைமை ஆசிரியர் அமரும் இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.

அப்போது அவர், இருக்கையில் அமர்ந்து, வருகை பதிவேட்டை சரிபார்த்தார். இதுகுறித்து மாணவர் தர்சன் கூறுகையில், “காலாண்டு தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் எடுத்ததற்காக, என்னை ஒருநாள் தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர வைத்துள்ளார். இது எனக்கு பெருமையாக உள்ளது. அதிக மதிப்பெண் எடுக்க தொடர்ந்து படித்து கொண்டிருந்தேன். பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் எடுப்பேன்’’ என்றார். தான் படித்து வரும் பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவர் தர்சனுக்கு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஒரு நாள் தலைமை ஆசிரியர் மாணவனுக்கு சர்பரைஸ்! appeared first on Dinakaran.

Tags : Pollachi ,High ,Makinambatti ,Darshan ,Dinakaran ,
× RELATED ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு