×

நோயாளிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: கலெக்டர் ராகுல் நாத் தொடக்கி வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு உலக நோயாளிள் பாதுகாப்பு தினம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்களில் இருந்தும் மருத்துவர்களும், செவிலியர்களும் பங்கு பெற்றனர். இந்த வருட உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் 2023 இதற்கான தலைப்பு, ‘நோயாளிகளின் பாதுகாப்பிற்காக நோயாளிகளை ஈடுபடுத்துதல்’ குறித்த தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், நோயாளிகளின் பாதுகாப்பிற்காக கட்டுரை போட்டி மற்றும் போஸ்டர் போட்டிகளும் நடத்த பெற்று பரிசுகளும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நோயாளிகளின் பாதுகாப்பிற்கான உறுதி மொழியினை முன்னுரைக்க கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை மருத்துவர்கள், செவிலியர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மகன் எழில்குமரன் (14) இறப்பிற்கு பின் அவரது இரண்டு கண்களையும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்.

அந்த நற் சேவையைப் பாராட்டி அவரது குடும்பத்திற்கு, கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். மேலும், மருத்துவமனை வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ராஜ, இணை இயக்குநர் (சுகாதாரம்) தீர்த்தலிங்கம், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரணிதரன், அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் அரசு, மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர், நிலைய மருத்துவர் தர், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நோயாளிகள் பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: கலெக்டர் ராகுல் நாத் தொடக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Patient Safety Day ,Collector ,Rahul Nath ,Chengalpattu ,Chengalpattu World Patient Safety Day ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...