×

ஹூண்டாய் ஐ20 என் லைன்

ஹூண்டாய் நிறுவனம், தனது என் லைன் வரிசையில் ஐ20 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் என் 6 மற்றும் என் 8 என இண்டு டிரிம்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.9.99 லட்சம் எனவும், டாப் வேரியண்ட்டான என்8 டிசிடி வேரியண்ட் சுமார் ரூ.12.31 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பேஸ்லிப்ட் மாடலில் தோற்றத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றமும் இல்லை. இந்த கார்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post ஹூண்டாய் ஐ20 என் லைன் appeared first on Dinakaran.

Tags : Hyundai ,Dinakaraan ,
× RELATED ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தினவிழா