×

ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சார்ந்த 2 திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

டெல்லி : ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சார்ந்த 2 திட்டங்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். ஆர்பிஐ சில்லறை நேரடி திட்டம் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ஆர்பிஐ ரீடெயில் டைரக்ட் திட்டத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களை தரக கட்டணமின்றி வாங்கலாம். இதனால் சிறு முதலீட்டாளர்களும் சுலபமாக அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். மத்தியஸ்தர் தீர்ப்பாய திட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களும் தங்கள் குறைகளை ஒருங்கிணைந்த ஒரே வலைத்தளத்தில் தெரிவித்து தீர்வு காணும் வசதி கிடைக்கும். 2 மொழிகளில் புகார் தெரிவிப்பதற்கான உதவியும் குறைத் தீர்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் முதலீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதோடு, முதலீட்டாளர்களள் முதலீட்டு சந்தைகளை அணுகும் முறைகளை இந்த திட்டங்கள் எளிதாக்கும் என்று கூறினார்.  …

The post ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சார்ந்த 2 திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,RBI ,Delhi ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை..!!