×

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துகளை தடுக்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவிலேயே பட்டாசு உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது. தீபாவளிப் பண்டிகை மற்றும் இதர பண்டிகைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததன் காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது.

எனவே, தீபாவளிப் பண்டிகை வருவதை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மருந்துக் கலவைகளை பயன்படுத்துவது குறித்தும், மீதமுள்ள மருந்துக் கலவைகளை அகற்றுவது குறித்தும், கழிவுப் பட்டாசுகளை அகற்றுவது குறித்தும், பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அதிகாரிகள் எடுத்துக்கூறி அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி வருங்காலங்களில் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துகளை தடுக்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : O. Pannerselvam ,Panneirselvam ,Tamil Nadu ,India ,Diwali ,O. Panneirselvam ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...