×

2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு!: பெண்கள், மனித உரிமைக்காக போராடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிப்பு..!!

ஓஸ்லோ: 2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வு குழு அறிவித்தது. ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி வரும் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஈரானில் பெண்களுக்காக போராடி பலமுறை சிறை சென்ற நர்கீஸ் முகமதி தற்போதும் சிறையில்தான் உள்ளார். ஈரானில் மகளிர் உரிமைக்காக மட்டுமின்றி மனித உரிமைகளுக்காகவும் போராடி வருபவர் நர்கீஸ் முகமதி.

பெண்கள் உரிமைக்காகவும் மனித உரிமைகளுக்காவும் போராடிய நர்கீஸ் முகமதியை ஈரான் அரசு 13 முறை கைது செய்துள்ளது. 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போதும் நர்கீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்கள் உரிமைகளுக்காக போராடிய நர்கீஸ் முகமதிக்கு ஈரான் அரசு இதுவரை 154 முறை சவுக்கு அடி கொடுத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் நர்கீஸ் முகமதி சிறையில்தான் உள்ளார்.

மகளிர் உரிமைக்காக போராடியதற்காக நர்கீஸ் முகமதிக்கு 5 முறை சிறை தண்டனை விதித்துள்ளது. பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம் என்ற தலைப்பில் பெரும் போராட்டம் வெடித்த ஈரானில் முக்கிய பங்குவகித்தவர் நர்கீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

The post 2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு!: பெண்கள், மனித உரிமைக்காக போராடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Narghis Mohammad ,Iran ,OSLO ,PRESIDENT ,Narghis Mohamad ,
× RELATED இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல,...