×

கிராம சபை கூட்டத்தின்போது கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக தான் பணியாற்றி வருகிறேன். கடந்த அக்டோபர் 2ம் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை கை மற்றும் காலால் தாக்கியதற்காக வன்னியம்பட்டிவிளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராமசபை கூட்டத்தின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு மிகவும் வருந்துவதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அம்மையப்பனிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். அச்சமயம் அரசு தரப்பில், ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் விவசாயியை தாக்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கியது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பதால் முன்ஜாமீன் வழங்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. எனவே ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கப்படுவதாகவும், வாரத்தில் ஒருநாள் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி வழக்கினை முடித்து வைத்தார்.

The post கிராம சபை கூட்டத்தின்போது கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : Munzameen ,Urratsi ,MADURAI ,SECRETARY OF URADJI ,Secretary of State ,Thangapantian Icourt ,Icourt ,Uradchi ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...