×

வால்பாறை தேயிலை தோட்டத்தில் திடீரென கரடி புகுந்ததால் பரபரப்பு: கரடி தாக்கியதில் தொழிலாளர்கள் காயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலை தோட்டங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது. நெல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு கிராமங்களில் தனது குட்டிகளுடன் யானைகள் வலம் வருகின்றனர். பகல் நேரத்திலேயே குடியிருப்புகளுக்குள் நுழையும் யானைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களை புகமிட்டுள்ளன. இதன் காரணமாக தேயிலை தோட்டத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே வால்பாறையை அடுத்த செங்குத்து பாறை தேயிலை தோட்டத்தில் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென கரடி புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை கண்டதும் தொழிலாளர்கள் தப்ப முயன்றபோது 2 வடமாநில பெண் தொழிலாளர்களை கரடி தாக்கியது. இதில் தலை மற்றும் காலில் படுகாயம் அடைந்த பெண்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

 

The post வால்பாறை தேயிலை தோட்டத்தில் திடீரென கரடி புகுந்ததால் பரபரப்பு: கரடி தாக்கியதில் தொழிலாளர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Valpara tea garden ,Nelagiri ,Kotagiri ,Nilgiri district ,Valpara tea ,Dinakaraan ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி...