×

அவிநாசி அருகே தனியார் நிறுவனத்தில் வாங்கிய நேந்திரன் வாழைக்கன்றுகள்: 13 மாதங்களாகியும் வளர்ச்சியடையாததால் விவசாயிகள் புகார்

திருப்பூர்: அவிநாசி அருகே தனியார் நிறுவனத்தில் வாங்கி பயிரிட்ட சூப்பர் நேந்திரன் ரக வாழைக்கன்றுகள் 13 மாதங்களாகியும் முழுமையாக வளர்ச்சியடையாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் நாடு முழுவதும் விவசாயத்திற்கு தேவையான சொட்டுநீர் பாசனம் அமைத்து தருதல், விதைகள் விற்பனை உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

இந்நிறுவனத்திடம் இருந்து அவிநாசியை அடுத்த தாண்டுக்காரன் பாளையம், ரம்மியபாளையம், குமாரப்பாளையம், புஞ்சை தாமரை குளம் விவசாயிகள் சுமார் 40,000 சூப்பர் நேந்திரன் ரக வாழைக்கன்றுகளை வாங்கி பயிரிட்டு இருந்தனர். 15-வது மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய கட்டத்தில் 13 மாதங்களாகியும் வாழைத்தார்கள் முழுமையாக வளர்ச்சி அடையாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாழைத்தார்கள் வளர்ச்சி அடையாதது குறித்து தொடர்புடைய தனியார் நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது முறையான பதில் இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனையடுத்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் அவிநாசி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்த நிலையில் வட்டாட்சியர் மோகன் வாழை மரங்களை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து இன்று அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் இடையே வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

The post அவிநாசி அருகே தனியார் நிறுவனத்தில் வாங்கிய நேந்திரன் வாழைக்கன்றுகள்: 13 மாதங்களாகியும் வளர்ச்சியடையாததால் விவசாயிகள் புகார் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Tiruppur ,Dinkaran ,
× RELATED திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை!