×

வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ விபத்து

 

ஈரோடு, அக். 6: ஈரோடு வெண்டிபாளையத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மக்கும், மக்காத குப்பை மலைபோல் பல டன் அளவுக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைக்கிடங்கினை சுற்றியும் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குப்பைக்கிடங்கில் நேற்று முன்தினம் இரவு திடீரென கரும்புகையுடன் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி, கொளுந்துவிட்டு எரிந்தது.

தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால், மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்து அணைக்கப்படாத பீடி அல்லது சிகரெட் வீசி சென்றதால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

The post வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Vendipalayam ,Erode ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்