×

சேரன்மகாதேவியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இசக்கிசுப்பையா எம்எல்ஏ பங்கேற்பு

வீரவநல்லூர், அக்.6: சேரன்மகாதேவியில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ. பங்கேற்று முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சேரன்மகாதேவியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை வகித்த நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் இசக்கிசுப்பையா, முக்கிய ஆலோசனைகள் வழங்கிப் பேசினார். இதில் இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றியச் செயலாளர் மாரிச்செல்வம், பேரூர் செயலாளர் பழனிக்குமார், துணைச்செயலாளர் சுசீந்திரன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் முருகன் நயினார், மாவட்டப் பிரதிநிதி பன்னீர்செல்வம், உச்சிமாகாளி, ஆறுமுகநயினார், முன்னாள் நகரச்செயலாளர் ஐசக்பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகாராஜன், இளைஞரணி செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக சேரன்மகாதேவி வந்த இசக்கிசுப்பையா எம்எல்வுக்கு பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து வரவேற்ற கட்சியினர், கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

The post சேரன்மகாதேவியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இசக்கிசுப்பையா எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Isakisupaya ,MLA ,Adamukh Booth Committee ,Serenamkadevi ,Veeravanallur ,Izakisupaya M. L. A. ,Meeting ,Dinakaraan ,
× RELATED விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும்...