×

கூலித் தொழிலாளி மாயம்

 

வேலாயுதம்பாளையம், அக். 6: குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி மாயமானார். தூத்துக்குடி மாவட்டம் வையார் ஊராட்சி ஸ்ரீ ராமாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகுபாணி. இவரது மகன் மணிமுத்து (35) கூலித்தொழிலாளி. மணிமுத்து கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சின்னரெங்கம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக மணி முத்து கோபித்துக் கொண்டு விட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிவு செய்து மணிமுத்துவை யாரவது கடத்திச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் விவகாரமா? என விசாரிக்கின்றனர்.

The post கூலித் தொழிலாளி மாயம் appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Thoothukudi District Vaiyar ,Panchayat Sri ,Ramapuram ,Mayam ,
× RELATED எரியாத மின்விளக்குகளால் விபத்து அபாயம் விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்