×

தோகைமலை 20 ஊராட்சிகளில் வேளாண்மை ஆலோசனை முகாம்

 

தோகைமலை, அக், 6: இதுகுறித்து தோகைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதன்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் தோகைமலை பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுகாதாரம், கல்வி, வேளாண்மை, நீர்பாசனம், ஊட்டச்சத்து என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவை அடுத்து தோகைமலை வட்டாரத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் இன்று 6ம் தேதி வேளாண்மைத்துறை சார்பாக சிறப்பு ஆலோசனை முகாம் நடக்கிறது.

இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொள்வதோடு, வேளாண்மைத்துறை சார்ந்த பிஎம் கிசான் திட்டம், மண் வளத்திட்டம், உழவர் உற்பத்தியாளர்குழு, விவசாயிகளுக்கான வாழ்வாதாரம் குறித்து கருத்துக்காட்சிகள் அமைக்கப்பட உள்ளது. ஆகவே முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள் பங்குபெறும் முகாம் தோகைமலை வட்டாரத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் தங்களுக்கான ஊராட்சி மன்றங்களுக்கு சென்று விவசாயிகள் பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post தோகைமலை 20 ஊராட்சிகளில் வேளாண்மை ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Tokaimalai ,Thokaimalai ,Assistant Director ,Thokaimalai Madankumar ,Karur ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு