×

ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

 

காரைக்கால், அக்.6: திருப்பட்டினம் ஆய்வாளர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது கீழவாஞ்சூர் ஆர்டிஓ சோதனைச் சாவடி அருகே இருவர் தகாத வார்த்தைகளால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் கீழவாஞ்சூரில் நாகூர் நெடுஞ்சாலையில் நின்று கொண்டு கூச்சலிட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியை சேர்ந்த வினோத்(24), வசந்த்(23) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

The post ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Tirupatnam ,Inspector ,Lenin Bharti ,Assistant Inspector ,Suresh ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு நலத்திட்ட உதவி தொகை