×

டீகோ கார்சியா தீவில் 32 தமிழ்நாடு, கேரள மீனவர்கள் சிறைபிடிப்பு

நாகர்கோவில்: பிரிட்டிஷ் இந்திய பெருங்கடலின் டீகோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்ட 2 விசைப்படகுகளையும் 32 தமிழக, கேரள மீனவர்களையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் என்பவரது மகன் சைமன் பாஸ்டினுக்கு சொந்தமான ‘மஞ்சுமாதா’ என்ற பெயர்கொண்ட 2 விசைப்படகுகளில் சின்னத்துறை , தூத்தூரை, இரவிபுத்தன்துறை, நாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 32 பேர் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செப்டம்பர் மாதம் 15ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

செப்டம்பர் மாதம் 27ம் தேதி இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக பெருங்கடலின் டீகோ கார்சியா தீவில் பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகள் இவர்களையும், 2 படகுகளையும் சிறைபிடித்தனர். இவர்களது படகிலிருந்த மீன்பிடி உபகரணங்களையும், இவர்கள் பிடித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மீனவர்களை கடந்த 3ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 32 மீனவர்களையும் படகுகளையும் மீட்க சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

The post டீகோ கார்சியா தீவில் 32 தமிழ்நாடு, கேரள மீனவர்கள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, Kerala ,Diego Garcia Island ,Nagercoil ,Tamil Nadu ,Kerala ,Indian Ocean ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு