×

ரூ.105.13 கோடி மதிப்பீட்டில் 579 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் தா.மோ. அன்பரசன்

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று (5.10.2023) தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருவொற்றியூர் கிராமத்தெரு திட்டப்பகுதியில் ரூ.59.77 கோடி மதிப்பீட்டில் 336 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், செட்டித் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.45.36 கோடி மதிப்பீட்டில் 243 புதிய குடியிருப்புகளுக்கும் ஆக மொத்தம் 2 திட்டப்பகுதிகளில் ரூ.105.13 கோடி மதிப்பீட்டில் 579 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமத்தெரு திட்டப்பகுதியில் 1993 ஆம் ஆண்டு 236 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 336 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது.

அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 59 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 415 சதுர அடியில் தரை மற்றும் 5 தூண் தளங்களுடன் 336 புதிய குடியிருப்புகளுக்கும், இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டித் தோட்டம் திட்டப்பகுதியில் 1993 ஆம் ஆண்டு 236 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 240 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 45 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 398 சதுர அடியில் தரை மற்றும் 9 தூண் தளங்களுடன் 243 புதிய குடியிருப்புகளுக்கும், அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட இடியும் தருவாயில் உள்ள பழைய குடியிருப்புகளை கணக்கெடுக்கும் படி உத்தரவிட்டார்கள். அதன்படி சென்னையில் 27,138 வீடுகளும் மற்றும் பிற மாவட்டங்களில் 3,354 வீடுகளும் மொத்தம் 30,492 பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. 2021-2022 மற்றும் 2022-2023 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15000 புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 30 திட்டப்பகுதிகளில் 7582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1627.97 கோடி மதிப்பீட்டில் 9,522 வீடுகள் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில் 10 திட்டப்பகுதிகளில் ரூ.668.7 கோடி மதிப்பீட்டில் 3907 புதிய குடியிருப்புகள் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 2 திட்டப்பகுதிகளில் ரூ.105.13 கோடி மதிப்பீட்டில் 579 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 12 திட்டப்பகுதிகளில் ரூ.773.83 கோடி மதிப்பீட்டில் 4486 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 திட்டப்பகுதிகளில் 854.05 கோடி மதிப்பீட்டில் 5036 குடியிருப்புகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

கட்டப்படவுள்ள புதிய குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் அமையவுள்ளது. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகிய வசதிகளும் அமைக்கப்படவுள்ளது. 18 மாதத்தில் பணிகள் நிறைவு செய்து குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்படும் எனவும் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.சுதர்சனம், ஐட்ரீம் ஆர். மூர்த்தி கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.கீதா சுரேஷ், உமா.சரவணன் உள்ளாட்சி பிரதிநிதிகள் , வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முகசுந்தரம், நிர்வாக பொறியாளர்கள் ச.சுடலைமுத்து குமார் என்.செந்தாமரைகண்ணன் வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

The post ரூ.105.13 கோடி மதிப்பீட்டில் 579 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் தா.மோ. அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Th.Mo ,Anbarasan ,Chennai ,Micro, Small and Medium Enterprises Department ,Mr. ,Mo. Anparasan ,Tamil Nadu ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...