×

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 100 போதை மாத்திரை, 10 ஊசி பறிமுதல்: தண்டையார்பேட்டையில் 2 ரவுடிகள் கைது

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்த 100 போதை மாத்திரைகள், 10 போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து போதை மாத்திரை, கஞ்சா கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதனிடையே நேற்று இரவு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை வைத்திருந்த பையை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை மற்றும் போதை ஊசி இருந்தது தெரியவந்தது.

மேலும் பெரும்பாக்கம் புதுநகரை சேர்ந்த ஐசக் (23), அதே பகுதியை சேர்ந்த அபிநாத் (21) என்பதும் தெரியவந்தது. இதில், ஜசக் மீது 2 கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கு உள்ளது. அபிநாத் மீது 5 கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் இருப்பதும், இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை ரயில் மூலம் கடத்தி வந்தபோது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை அதிகம் இருக்கும் என்பதால், புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் ரயில் நிலத்தில் இறங்கி பஸ் மூலம் வேளச்சேரி செல்ல இருந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இவர்களிடமிருந்து 100 நைட்ரோ வெட் மாத்திரைகள் மற்றும் 10 போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்குப்பதிவு செய்து ஐசக், அபிநாத் ஆகியோரை கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 100 போதை மாத்திரை, 10 ஊசி பறிமுதல்: தண்டையார்பேட்டையில் 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Kadarbatat ,AP ,Rawudi ,Kadyarbat ,Dinkaran ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...