×

சிக்கிம் ஏரி உடைப்பிற்கு நேபாள நிலநடுக்கம் காரணமா ?.. 402 ஏக்கரில் இருந்த ஏரி 149 ஏக்கராக சுருங்கியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!!

பெங்களூரு : மேகவெடிப்பால் தண்ணீர் வெளியேறி சிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரியின் பரப்பளவு 2 மடங்கு குறைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்களில் 402 ஏக்கர் அளவிற்கு இருந்த தெற்கு லோநாக் ஏரியின் பரப்பளவு 28ம் தேதி 413 ஏக்கர் அளவிற்கு விரிவடைந்துள்ளது. அதைத் தொடர்ந்தே ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறி பெரு வெள்ளம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஏரியின் பரப்பளவு 149 ஏக்கராக சுருங்கி உள்ளது. பனிப்பாறைகள் சூழ்ந்த லோனாக் ஏரியால் இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என கடந்த 10 ஆண்டுகளாகவே பல அரசு நிறுவனங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் எச்சரித்து வந்தனர்.

அதே நேரத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்த சம்பவங்கள் நடந்ததா எனவும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நேபாளத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய அளவில் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே சிக்கிம் மாநிலத்தில் லோநாக் ஏரி பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டத் தொடங்கியது. சில மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக லாசென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சுங்தாங் அணையும் உடைந்தது. மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 22 ராணுவ வீரர்கள் உட்பட 120 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர்.

The post சிக்கிம் ஏரி உடைப்பிற்கு நேபாள நிலநடுக்கம் காரணமா ?.. 402 ஏக்கரில் இருந்த ஏரி 149 ஏக்கராக சுருங்கியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Lake Sikkim ,ISRO ,Bangalore ,Lake Lonak ,Sikkim ,Nepal ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...