×

சிக்கிமில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் – அணை உடைந்து கடும் சேதம்… 40 பேர் உயிரிழப்பு; 120 பேர் மாயம்!!

காங்டாக்: சிக்கிமில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 22 ராணுவ வீரர்கள் உட்பட 120 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் லோநாக் ஏரி பகுதியில் நேற்று அதிகாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கனமழை கொட்டத் தொடங்கியது. சில மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக லாசென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சுங்தாங் அணையில் நீர்வரத்து உயர்ந்தது. இதனால் உடனடியாக அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. நீர்மட்டம் திடீரென 15-20அடி உயரத்துக்கு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர குடியிருப்புக்கள் வெள்ளத்தில் சிக்கின.

வெள்ள பாதிப்பில் 40 பேர் உயிரிழந்த நிலையில், 22 ராணுவ வீரர்கள் உட்பட 120 பேர் காணாமல் போனதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதில் ஒரு ராணுவ வீரர் பத்திரமாக மீட்கப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சுங்தாங் அணையின் முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலை என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படம் பெரு வெள்ளத்தில் கோர முகத்தை காட்டுவதாக உள்ளது. அதற்கேற்ப பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post சிக்கிமில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் – அணை உடைந்து கடும் சேதம்… 40 பேர் உயிரிழப்பு; 120 பேர் மாயம்!! appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Gangtok ,
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...