×

வடக்கு அமுதுண்ணாக்குடியில் மின்கம்பங்களில் பூச்சுகள் பெயர்ந்து அபாய நிலையில் டிரான்ஸ்பார்மர்

சாத்தான்குளம், அக். 5:வடக்கு அமுதுண்ணாக்குடியில் மின்கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அபாய நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சாத்தான்குளம் யூனியன் அமுதுண்ணாக்குடி பஞ்சாயத்திற்குட்பட்ட வடக்கு அமுதுண்ணாக்குடியில் சாலையோரம் குடியிருப்பு மற்றும் வயல் பகுதிகளுக்கு மின் சப்ளை விநியோகிக்கும் வகையில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு சாத்தான்குளம் மின்வாரியம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின்கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து வெடிப்பு விழுந்து அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள், இந்த அபாய டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்றி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வடக்கு அமுதுண்ணாக்குடியில் மின்கம்பங்களில் பூச்சுகள் பெயர்ந்து அபாய நிலையில் டிரான்ஸ்பார்மர் appeared first on Dinakaran.

Tags : North Amuthunnakudi ,Satankulam ,
× RELATED மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை