×

மானூரில் வனத்துறை சார்பில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

மானூர்,அக்.5: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் மானூர் ஊராட்சி நல சமுதாயக்கூடத்தில் வனச்சரகம் மற்றும் வேளாண்துறை சார்பில் நடந்தது. வனச்சரகர் சரவணக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் வனவர் அழகர்ராஜ், வன காப்பாளர்கள் மதியழகன், மணிகண்டன், பரியாதேவி, வேளாண்மைத்துறை உதவி செயற்பொறியாளர் முருகன், இளநிலைப்பொறியாளர் லட்சுமிகாந்தன், உதவி பொறியாளர் மதுஜெகதீஸ், தமிழ்நாடு அனைத்து சங்க தலைவர் மானூர் மாரியபப்பன், செயலாளர் ஆபிரகாம். பொருளாளர் சேகர். ஒன்றியத்தலைவர் தேவதாசன், பொருளாளர் வேதமணி, செயலாளர் ராஜேந்திரன், மற்றும் விவசாயிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post மானூரில் வனத்துறை சார்பில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Manoor ,Manur ,Manur Panchayat Welfare Community Center, Forestry and Agriculture Department ,
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்