×

செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் உபகரணங்கள் வழங்கும் விழா

தஞ்சாவூர்: கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கவுதமன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட திமுக மருத்துவர் அணி தலைவர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை தொகுதி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ், தொகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார், பாட்ஷா, புவனேஸ்வரி, வெங்கடேசன், நிர்வாகிகள் டாக்டர் திருச்செல்வி, காயத்ரி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் உபகரணங்கள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Sentala Government Primary Health Centre ,Thanjavur ,DMK ,Sentala Government Primary Health Center ,
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...