×

வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று மணல் குன்றுகளாக மாறிய கடற்கரை பகுதி

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் கடல் கடும் சீற்றம் காற்றின் வேகத்தால் கடற்கரை மணல் குன்றுகளாக காட்சியளிக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வழக்கத்திற்கு மாறாக வீசும் சூறைக்காற்று காரணமாக கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கரையில் ஏற்றி பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். கோடியக்கரை கடற்கரை பகுதியில் வீசும் சூறைக் காற்று காரணமாக சாலைகளின் குறுக்கேயும், கடற்கரை பகுதிகளிலும் சுமார் 5 அடி உயரம் மணல் குன்றுகளாக காட்சியளிக்கிறது. திடீன உருவான மணல் குன்றுகளால் மீனவர்கள் மற்றும் வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது.

The post வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று மணல் குன்றுகளாக மாறிய கடற்கரை பகுதி appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Kodiakkarai ,Nagai district ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் அருகே பழமை வாய்ந்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்